சென்னை, கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல் விடுத்த தென்காசியை சேர்ந்த கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டார். பாட்டுப் போட்டி இலங்கையை பூர்வீகமாக கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர், சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர், பெசன்ட் நகர் கடற்கரையை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். இவருக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. எனவே அங்கு கிளி ஜோதிடம் பார்த்துள்ளார். கிளி ஜோதிடர் அந்தப் பெண்ணின் கடந்த கால வாழ்க்கையை துல்லியமாக கணித்துள்ளார். இதனால் அந்த பெண், ரூ.20 ஆயிரம் பணத்தை ஜோதிடருக்கு கொடுத்துள்ளார். ஜோதிடம் பார்த்ததற்கு ரூ.20 ஆயிரமா? என்று அந்த ஜோதிடர் வியப்படைந்துள்ளார். 'வாட்ஸ் அப்' வீடியோ காலில் அந்த பெண்ணின் ஜோதிட நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஜோதிடர் இறங்கி உள்ளார். அந்த பெண்ணி டம், 'உங்களுக்கு தோஷம் இருக்கிறது. நிர்வாணப் பூஜை செய்தால் நீங்கிவிடும். அதன்பின்னர் உங்கள் வாழ்க்கை ஓஹோ. என்றாகிவிடும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பி, உறவினர் வீட்டில் தான் தங்கிய அறையில் இருந்து ஜோதிடருக்கு 'வாட்ஸ் அப்' வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவரை நிர்வாண கோலத்தில் வர சொல்லி பூஜை செய்வது போன்று தனது செல்போனில் அந்த ஜோதிடர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பரிகாரப் பூஜைக்கு ரூ.70 ஆயிரம் கட்டணமாகவும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த பெண், கனடா நாட்டுக்கு சென்றுவிட்டு தனியார் தொலைக்காட்சியின் அழைப்பின் பேரில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்துள்ளார். தான் சென்னை வரும் தகவலை ஜோதிடரிடம் கூறி இருக்கிறார். அப்போது அவரிடம், மீண்டும் பரிகாரப் பூஜை செய்யவேண்டும். அதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று ஜோதிடர் கேட்டிருக்கிறார். மிரட்டல் அதற்கு கனடா பெண், 'இதுவரையில் செய்த பரிகாரப் பூஜையே போதும், இனி வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது அந்த ஜோதிடர், 'உன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் எனது செல்போனில் இருக்கிறது. நீ பணம் தரவேண்டும். இல்லையென்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இதை செய்ய தவறினால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன்' என்று கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். புழல் சிறையில் ஜோதிடரின் சுயரூபத்தை கண்டு கனடா பெண் அதிர்ச்சி அடைந்தார். அவர் மீது தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை நடத்தி மிரட்டல் விடுத்த கிளி ஜோதிடர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (48) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தென்காசி சென்று அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/parrot-astrologer-jailed-for-threatening-canadian-woman-after-performing-naked-puja




