அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’. கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். DC | டிசி அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் 'டிசி' படக்குழுவை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில்,"'டிசி' தமிழ் திரையுலகின் கிளாசிக். சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு சல்யூட். அனிருத் மாஸ்டர் பூஸ்டர். எல்லா கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக வாமிகா கேபி மற்றும் ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான் மிகப்பெரிய தூணாக நிற்கின்றனர்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார். 'ஏன் நீங்க நடிக்க வரணும்னு தான் முதல்ல கேட்டேன்.' - லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/actor-allu-arjun-praises-lokesh-kanagaraj-dc-movie-crew




