ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர். கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வு அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/srivilliputhur-palkova-price-hike-comes-into-effect-today




