திருவனந்தபுரம், நிறை புத்தரிசி பூஜை என்பது கேரளம் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் ஆன்மிக சிறப்புமிக்க அறுவடை திருவிழாவின் தொடக்க வழிபாடாகும். மலையாள மாதத்தின் கர்க்கடகம் (ஆடி) மாதத்தின் இறுதி அல்லது சிங்கம் (ஆவணி) மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களில் இந்த சிறப்பு பூஜை விமரிசையாக நடத்தப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருக்கும் புதிய நெற்கதிர்களை அறுத்து, மேள தாளம் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் கோவிலுக்கு கொண்டு சென்று பீடத்தில் வைத்து பூஜை நடத்தப்படும். இது இயற்கைக்கு நன்றி செலுத்தும் சடங்காக கருதப்படுகிறது. சிறப்பு பூஜை இத்தகைய சிறப்புமிக்க நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. நிறை புத்தரிசி நாளான நேற்று அதிகாலையில் 18-ம் படி வழியாக கொண்டு வரப்பட்ட நெற்கதிர் கட்டுகள் மற்றும் பக்தர்கள் செலுத்திய புது நெல் மணிகளுக்கு காலை 5.40 மணி முதல் காலை 6.20 மணி வரை தந்திரி தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டு சாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்றனர். இதுதவிர கேரளத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில், குருவாயூர் கோவில்களிலும் நேற்று நிறை புத்தரிசி பூஜை சிறப்பாக நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/full-buddharishi-puja-at-sabarimala-devotees-offer-rice-grains-as-offerings




