மும்பை கடன் தொகை குறைவாக வழங்கப்பட்டால், கடன் வசூல் சிறப்பாக இருக்கும் என மத்திய மந்திரி அமித்ஷா கூறினார். மராட்டியத்தின் மும்பை நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசும்போது, ஒரு நகர்புற கூட்டுறவு வங்கி, அந்த பகுதியிலுள்ள அனைத்து மக்களின் கனவுகளையும் பூர்த்தி செய்ய உதவும். ஒரு வங்கி தலைவராக நான் பணியாற்றி உள்ளேன். அந்த வகையில், என் அனுபவத்தில், குறைந்த மதிப்பில் கடன் வழங்கினால், அதற்கான வசூல் விகிதம் அதிக அளவில் இருக்கும். எனது வங்கியில், ஒருமுறை நான் உத்தரவாதங்களோ அல்லது பிணையங்களோ கோராமல் ரூ.2.5 லட்சம் வரை கடன் வழங்குவது என முடிவு செய்தேன். ஆனால், குழப்பமான 'கடன் திருவிழாவாக' இது மாறும் என மூத்த தலைமை செயல் அதிகாரியான ராமன்பாய் பட்டேல் என்பவர் கூறினார். கடன் வரம்பு அதிகரிப்பு நான் இந்த கூட்டத்தில் பங்கேற்க வருவதற்கு முன்பு, நேற்று அந்த வங்கியில் விசாரித்தேன். அந்த திட்டம் இன்னும் அமலில் உள்ளது. அதனுடன், கடன் வரம்பு ரூ.5 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்த தவறியவர்களின் விகிதம் பற்றி கேட்டபோது, அது 99.78 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதுவும் வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டு இருந்தது. இதில், கடன் செலுத்த தவறியவர்கள் யாரென்றால், சிறிய பிளாட் ஒன்றை வாங்கிய வீட்டு தலைவர் உயிரிழப்பது அல்லது ஆட்டோ ரிக்சாவுக்காக கடன் வாங்கியவர் உயிரிழப்பது, போன்ற துரதிர்ஷ்டவச சூழல்களே காரணிகளாக உள்ளன. இதனால், கடன் வசூல் விகிதம் முழுமையாக 100 சதவீதம் என்ற அளவில் இல்லை. இதனை வைத்து பார்க்கும்பாது, கடன் தொகை குறைவாக வழங்கப்பட்டால், கடன் வசூல் சிறப்பாக இருக்கும். அதனால், இந்திய பொருளாதாரத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கூட்டுறவு சங்கங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/in-my-experience-if-you-give-a-loan-at-a-low-value-it-will-be-returned-in-full-amit-shah-speech




