தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய இரு கிராம மக்களுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு இடத்தில் கபடி விளையாடும் நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கபடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கபடி விளையாடும் நிலம் தொடர்பாக லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் கிராம மக்களிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் இந்நிலையில், இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரிய அளவில் மோதலாக வெடித்தது. ஆத்திரமடைந்த இரு கிராம மக்களும் கற்களை வீசி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். போலீசார் குவிப்பு இந்த கல்வீச்சு சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 40 பேர் மீது வழக்கு இந்த கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது தொடர்பாக இரு கிராமங்களையும் சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-land-dispute-clash-between-two-villages-40-booked




