பெங்களூரு, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், 2027 ஐபிஎல் சீசனில் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பல சீசன்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் பந்துவீச்சு வரிசையில் முக்கிய வீரராக திகழ்ந்த அவர், 2025-ம் சீசனில் ஆர்சிபி அணியிலிருந்து விலகி, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இனைந்தார். கடந்த 2 ஐபிஎல் சீசன்களாக குஜராத் அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போது மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் இணைகிறாரா? ஐபிஎல் தொடரில் வீரர்கள் தொடர்பான டிரேட் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், சிராஜ் மீண்டும் ஆர்சிபியுடன் இணையலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. எனினும், சிராஜை மீண்டும் ஆர்சிபி அணியில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/ipl-2027-hyderabad-pacer-back-in-rcb-line-clear-for-sirajs-re-entry




