பகோடா, கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 164 பேர் பலியாகினர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தலைநகரான பகோடாவுக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் உள்ள சோகோ அருகே சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியில் மையங்கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்கா மற்றும் கொலம்பியாவின் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 164 பேர் பலி இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் நேரம் செல்ல செல்ல தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. இதுவரை மொத்தம் 164 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிசலஸில் உள்ள புகழ்பெற்ற தேவாலய கோபுரம் இடிந்து விழுந்தது. காலி நகரில் 19 கட்டிடங்கள் இடிந்ததில் பலர் சிக்கியுள்ளதாக மேயர் அலெஜான்ட்ரோ எடர் தெரிவித்தார். குய்ப்டோ நகரிலும் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. அண்டை நாடான ஈகுவடாரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். மீட்புப் பணிகள் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளை நேரில் கண்காணிப்பதாக கொலம்பியா அதிபர் அபெலார்டோடி லா எஸ்பிரெல்லா அறிவித்துள்ளார். மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அவசரநிலை புதிதாகப் பதவியேற்ற அதிபர் அபெலார்டோ டிலா எஸ்பிரியெல்லா, மீட்புப் பணிகளுக்கான நிதியை விரைவுபடுத்துவதற்காக அவசரநிலையை அறிவித்தார். அதே நேரத்தில், சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. ஆறு பிராந்திய விமான நிலையங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து, கொலம்பியாவின் சில பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது மேற்கு மாகாணமான ரிசரால்டாவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-164-with-more-casualties-expected




