நகரி, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கி வரும் "மைசா" படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்தால் அவருக்கு தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ரணபலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி சமீபத்தில் இணைந்து நடித்தனர். ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடித்து கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். அதில் அவருக்கு தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முழுமையாக குணமடைய 6 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆக்ஷன் திரில்லரான 'மைசா' படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை அவர் அண்மையில் முடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாடல் காட்சி பட மாக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/accident-on-set-actress-rashmika-mandanna-severely-injured




