திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான சாமிநாதன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சாமிநாதன் அப்பகுதியில் கேபிள் டி.வி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதனுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மெடிக்கல் ஷாப் வாசலில் சாமிநாதன் இதையடுத்து, திருவாரூர் பனகல் சாலையில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்குவதற்காக தன்னுடைய டூவீலரில் தானே ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். மெடிக்கல் ஷாப் வாசலில் டூவீலரை நிறுத்தி விட்டு நெஞ்சு எரிச்சலுக்கு மாத்திரை கேட்டுள்ளார். ஒரு சில நிமிடங்கள் கூட ஆதாக நிலையில் நின்று கொண்டிருந்தவர் திடீரென அப்படியே மயங்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு சாமிநாதன் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே கிடந்துள்ளார். இதைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து சாமிநாதன் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித அசைவும் இல்லை. இதைதொடர்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மெடிக்கல் ஷாப் வாசலில் உயிரிழந்த சாமிநாதன் அங்கு சாமிநாதனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் சாமிநாதன் குடும்பத்தினருக்குச் சொல்லப்பட அவர்கள் கதறியுள்ளனர். சாமிநாதன் மெடிக்கல் ஷாப் வாசலில் மயங்கி விழுந்து இறக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதறவைத்துள்ளது. சாமிநாதன் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளள்ளது. சென்னை: தாயின் கண்முன் மகன் கொலை - நடந்தது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/accidents/thiruvarur-man-came-to-buy-medicine-for-heartburn-dies-right-at-pharmacy-entrance




