அல்ஜியர்ஸ், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர். தீ விபத்து இந்நிலையில், இந்த காப்பகத்தில் கடந்த வியாழக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் காப்பகத்தில் தங்கி இருந்த 11 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில் காப்பகத்தில் இருந்த ஏசியில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/algeria-fire-in-childcare-institution-kills-11-children




