மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே ரிஸ்க்கானது; உத்தரவாதம் இல்லாதது; அதில் முதலீடு செய்தால், நஷ்டம் நிச்சயம் என்று நினைத்துப் பலரும் அதில் முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒன்று, இரண்டு என குறுகிய காலத்தில்தான் ரிஸ்க்கானது. நீண்ட காலத்தில் 12% வரை ஆண்டுதோறும் லாபம் தரக்கூடியது என்பதே கடந்த 10 கால வரலாறு நமக்குச் சொல்கிறது. அது மட்டுமல்ல, 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் நஷ்டம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் கடந்த 10 ஆண்டு கால வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் குறுகிய கால ரிஸ்க்கிற்குப் பயந்து, அதிலிருந்து பலரும் ஒதுங்கி நிற்பது ஒரு பிரச்னை என்றால், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யாமல் குறுகிய காலத்தில் மட்டும் முதலீடு செய்வது இன்னொரு பெரிய பிரச்னை. உள்ளபடி பார்த்தால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது 7 ஆண்டுகள் தொடங்கி, 10, 15, 20 என நீண்ட கால முதலீடு. ஒரு வீட்டை வாங்கி 30 முதல் 50 ஆண்டுகளுக்கு வைத்திருப்பது போல, தங்க நகையை வாங்கி, 30 முதல் 50 ஆண்டுகளுக்கு வைத்திருப்பது போல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைக் குறைந்தபட்சம் 10 முதல் 20 ஆண்டுகளுக்காகவாவது வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் 'பவர் ஆஃப் காம்பவுண்டிங்' என்று சொல்லப்படும் கூட்டு வட்டி வளர்ச்சியின் பயனாகக் கிடைக்கும் மிகப் பெரிய லாபம் நமக்குக் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட் ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் அது புதிய, புரியாத முதலீடாகத்தான் இருக்கிறது. உள்ளபடி பார்த்தால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது புரிந்துகொள்வதற்கு எளிதானது. முதலீடு செய்வதும் மிகச் சுலபம். அதனால், இன்றைக்கு இந்தியா முழுக்க சுமார் 6 கோடி பேர் மியூச்சுவல்தான் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் சுமார் 30 கோடி பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 15, 20 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் இது ஒரு நீண்ட கால முதலீடு என்று கருதவே இல்லை. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்தனர். பங்குச் சந்தை திடீரென இறக்கம் காணும்போது, சிறிதளவு நஷ்டம் வருவதைப் பார்த்து பயந்து போய் எஸ்.ஐ.பி கணக்கை நிறுத்தியவர்கள் பல லட்சம் பேர். கொஞ்சம் லாபம் கிடைத்ததைப் பார்த்து, உடனே அந்த லாபத்தைத் திரும்ப எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து, மொத்தப் பணத்தையும் திரும்ப எடுத்தவர்கள் பல லட்சம் பேர். மியூச்சுவல் ஃபண்ட் | SIP ஆனால், அண்மைக் காலமாக இந்தக் குறுகிய கால சிந்தனைப் போக்கு வெகுவாக மாறி இருக்கிறது என்பதைத்தான் ஆம்ஃபி - கிரிசில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகி இருக்கும் மொத்த முதலீட்டில் 19.2% முதலீடானது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இருக்கிறது. அதாவது, 10 பேரில் 2 பேர் தனது முதலீட்டைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கிறார் என்பதே இதன் அர்த்தம். கடந்த 2021-ஆம் ஆண்டு இது வெறும் 7.7 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டை வைத்திருப்பது 7.7 சதவிகிதத்தில் இருந்து 19.2 சதவிகிதமாக உயர்ந்திருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் இது சுமார் 40% வரை உயரும் என கணிக்கலாம். நீண்ட கால நோக்கில் முதலீட்டை வைத்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதன் மூலம் நிறைய லாபத்தை முதலீட்டாளர்களுக்கு சம்பாதித்துத் தரவும் முடியும். எஸ்.ஐ.பி SIP ஆக, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சரியா, தவறா என்கிற கேள்வியைத் தாண்டி, அதில் முதலீடு செய்வது சரியானதுதான். அந்த முதலீட்டையும் நீண்ட காலத்துக்கு செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். இந்த நிலையில், இதுநாள் வரை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே ஆபத்தானது என்று நினைத்து ஒதுங்கி இருந்தவர்கள், இனிவரும் காலத்தில் இந்த முதலீட்டைத் தவிர்க்க முடியாது என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.500, ரூ.1000 எனக் குறைந்த அளவு பணத்தைக்கூட மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால், பலரும் இந்த முதலீட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது. லாபம் உங்கள் முதல் 1 கோடியை சேர்ப்பது எப்படி? 'உங்கள் முதல் 1 கோடி ரூபாயை சேர்ப்பது எப்படி?' என்கிற ஆன்லைன் வெப்பினார் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12.30 வரை நடக்க வுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைய விரும்புபவர்கள் பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் லிங்க் அனுப்பப்படும். மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்! ஏ.ஆர்.குமார் - 89259 44568 சபரிநாதன் - 89259 44569 தங்கலட்சுமி - 95007 77894 வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போருக்கு: இந்தியாவில் வசிப்போருக்கு: Labham Youtube Channel: Labham Website: முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/mutual-fund-investment-a-data-story




