டோக்கியோ, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான தனிநபர் ‘டிரேப்’ (Trap) பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதி இந்த மகத்தான வெற்றிக்கு பின்னால் நீருவின் கடுமையான உடல்நலப் போராட்டமும் தளராத பயிற்சியும் ஒளிந்துள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, கடும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேசிய பயிற்சி முகாமிலும் அவரால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. பல நாட்கள் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்ததாகவும், தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி உடலைத் தேற்றியதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் விரைவாக குணமடைந்த அவர் இன்று இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து வரலாறு படைத்துள்ளார். பெரும் சவால் இறுதிப் போட்டி நடைபெற்ற ஐச்சி ப்ரிபெக்ச்சுரல் ஜெனரல் ஷூட்டிங் கேலரியில் (Aichi Prefectural General Shooting Gallery) போட்டி நடைபெற்ற நேரம் முழுவதும் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பார்வையிலும் இலக்கைத் தாக்குவதிலும் போட்டியாளர்களுக்குப் பெரும் சவால்கள் இருந்தன. ஆனால், இந்த சாதகமற்ற சூழ்நிலையையும் தனது மனஉறுதியால் நீரு தண்டா வென்றெடுத்தார். இறுதிச் சுற்றில் மொத்தம் 30 இலக்குகளில் 28 இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி புதிய ஆசிய சாதனையைப் பதிவு செய்தார். இதற்கு முன்பு 24 இலக்குகளைத் தாக்கியதே சாதனையாக இருந்த நிலையில், அதைவிட 4 இலக்குகள் அதிகமாகத் தாக்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளார். லக்சய் ஷியோரன் நீரு தண்டா துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்கு வர அவரது குடும்பமே முக்கியக் காரணமாக இருந்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிரேப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லக்சய் ஷியோரன், நீருவின் உறவினர் ஆவார். லக்சயின் பெற்றோரின் ஆலோசனையின் பேரிலேயே நீரு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் முறைப்படி பயிற்சி பெறத் தொடங்கினார். தொடர் வெற்றிகள் முன்னதாக, நடைபெற்ற லோனாடோ டெல் கார்டா உலகக் கோப்பையில் நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்று சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார். நீருவின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 5 தங்கம் உட்பட 47 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பதக்கப்பட்டியலில் இந்தியா இன்னும் முதல் 10 இடங்களுக்குள் நுழையவில்லை. தற்போது 11-வது இடத்தில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/from-hospital-bed-to-asiad-gold-neeru-dhanda-reflects-on-historic-medal




