டோக்கியோ, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கிரிக்கெட் பிரிவில், அரையிறுதியில் இந்தியாவுடன் இலங்கை மோதுகிறது. மழை ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் இலங்கை - நேபாளம் அணிகள் மோத இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை தொடர்ந்து பெய்ததால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து, தரவரிசை அடிப்படையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இலங்கை அரையிறுதியில் இலங்கை, இந்தியாவுடன் மோத உள்ளது. அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதி மற்றொரு காலிறுதிப் போட்டியிலும் மழை குறுக்கிட்டது. மலேசியா - வங்காளதேசம் அணிகள் மோதவிருந்த காலிறுதிப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் தரவரிசை அடிப்படையில் வங்காளதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-2026-india-to-face-sri-lanka-in-mens-cricket-semi-final




