சென்னை, லண்டனில் மின்சாதன உற்பத்தி ஆலை நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் விஜய் ரூ.300 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.இது குறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- ரூ.300 கோடி முதலீடு இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று, தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தி துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, ஐஎப்எஸ், நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-signs-mou-with-electronics-manufacturer-in-london-for-rs-300-crore




