புதுடெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள சொகுசு ஓட்டல் அறையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழைப்பை ஏற்கவில்லை ஏர் இந்தியா விமானி, டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. பூட்டிய அறைக்குள் நேர்ந்த சோகம் இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, விமானி சுயநினைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மாரடைப்பு என சந்தேகம் உடனடியாக டெல்லி வசந்த் குஞ்ச் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விமானியை சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் அவருக்குத் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழு காரணமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா இரங்கல் இந்த விபரீத மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. டெல்லி போலீசார் இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டல் அறையில் இருந்த தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/mystery-death-of-air-india-pilot-in-delhi-luxury-hotel




