திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (வயது: 60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் எலித் தொல்லை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் இவரது படுக்கைக்கு வந்த எலி ஒன்று, தமிழ்கொடியின் கால் கட்டை விரலைக் கடித்ததாகச் சொல்லப்படுகிறது. thamizhkodi உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்துத் தேவையான தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் கா ல் கட்டை விரலை எலி கடித்ததாக சொல்லப்படும் சம்பவம், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/hospitalized-elder-woman-was-bitten-by-a-rat-in-trichy-govt-hospital




