திருவள்ளூர், பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உள்பட 3 பேரை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், இவர் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை விலைக்கு வாங்கி, அவற்றை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக சார் பதிவாளர் சங்கரை அணுகினார். அப்போது, பத்திரத்தை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார் பதிவாளர் சங்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர். கையும் களவுமாக சிக்கினர் மேலும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆடி அமாவாசையையொட்டி பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். போலீசார் பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நடராஜன் லஞ்சமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை சார் பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் எழுத்தரின் உதவியாளர் நித்யா ஆகியோர் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். பின்னர் கைதான 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15000-bribe-for-house-plot-document-three-arrested-including-sub-registrar




