சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்கா வில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் பிளவியோ கோபோலி 2-6. 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமி பாலை (அமெரிக்கா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஆர்துர் பில்ஸ் (பிரான்ஸ்) தன்னை எதிர்த்த தியாகோ அகஸ்டினை (அர்ஜென்டினா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஆர்துல் பில்ஸ், கோபோலியை சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்).இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மல்லுகட்டினார். முதல் செட்டில் ரைபகினா 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/tennis/cincinnati-open-tennis-swiatek-advances-to-the-semi-finals




