தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மற்றும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், " கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கவலையை உங்கள் முன் வைப்பதற்காக, நீங்கள் வகிக்கும் உயர் அரசியல் அமைப்பு பதவியின் மீதுள்ள மரியாதையுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். விசிக தலைவர் திருமாவளவன் தாங்கள் அறிந்தபடி, பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜ் பவனின் அறிவுறுத்தலின் பேரில், விழாவின் தொடக்கத்தில் 'வந்தே மாதரம்', அதைத் தொடர்ந்து தேசிய கீதம், மூன்றாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் என்று தெரிவித்தார். இந்த வரிசை மாற்றம் தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதை மரியாதையுடன் பகிர்ந்துகொள்ளவும், எதிர்கால நிகழ்வுகளுக்கு இதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தவுமே நாங்கள் எழுதுகிறோம். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டின் பொது விழாக்களின் தொடக்கத்தில் பாடப்பட்டு வரும் 'நீராரும் கடலுடுத்த' பாடலை இயற்றிய அறிஞர் திரு.மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பெயரைக் கொண்டுள்ளது. இப்பாடலை மாநில அரசு 2021-இல் தனது அதிகாரபூர்வ மாநிலப் பாடலாக முறைப்படி அங்கீகரித்தது. அவரது பெயரிலேயே நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இப்பாடல் மூன்றாவதாக வைக்கப்பட்டது, அம்மாநில மக்கள் பேரன்பு வைத்துள்ள ஒரு சான்றோருக்கும், பள்ளி, கல்லூரிகளில் தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் பின்பற்றி வந்த நடைமுறைக்கும் ஏற்பட்ட திட்டமிடப்படாத அவமரியாதையாக எங்களைப் உட்பட தமிழ்நாட்டின் பலர் உணர்கின்றனர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இக்கடமையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது எங்கள் கடமையாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்லேகர் மேலும், ஜூன் 2026-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாங்கள் ஆற்றிய உரை 'தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது என்பதை மரியாதையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாரம்பரிய நடைமுறை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதை மாநிலம் முழுவதும் மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றனர். ஆனால், அதற்கு அடுத்தபடியே மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரிசை மாற்றம், அந்த நல்வரவேற்பைப் பெற்ற நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வதாகவே பலரால் பார்க்கப்படுகிறது. ஐயா, கோரிக்கை வெளிப்படையானது, அதே வேளையில் இது சரியான நோக்கத்தில் புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடனும் வைக்கப்படுகிறது. 'தமிழ்த்தாய் வாழ்த்தை' முதலிலும், தேசிய கீதத்தை இறுதியிலும் பாடும் தமிழ்நாட்டின் நடைமுறை இந்த மாநிலத்திற்கு மட்டும் தனித்துவமானது அல்ல. கர்நாடகாவின் பல்கலைக்கழகங்களும் கன்னட மாநிலப் பாடலுக்கு இதே போன்ற சுற்றறிக்கையைப் பின்பற்றுகின்றன; மேலும் பல மாநிலங்களும் தங்களது மாநிலப் பாடல்களுக்கு இவ்வாறே செய்கின்றன. இந்த நடைமுறையை மதிப்பது தேசிய கீதத்திற்கோ அல்லது வந்தே மாதரத்திற்கோ அளிக்கும் மரியாதையைக் குறைத்துவிடாது. சொல்லப்போனால், உங்கள் உயரிய பதவி பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உண்மையான சிந்தனையை — அதாவது ஒரு மொழியை விட இன்னொன்றை உயர்வாக வரிசைப்படுத்த வேண்டிய அவசியமின்றி, பல மொழிகளையும் பற்றுகளையும் ஒன்றாக இணைத்து நிமிரும் நாட்டின் வலுவான ஒற்றுமையை—இது பிரதிபலிக்கிறது. ஆளுநர் அர்லேகர் எனவே, தமிழ்நாட்டின் நீண்டகால நடைமுறைக்கு ஏற்ப, பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படுவதையும், நிறைவில் தேசிய கீதம் பாடப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், ராஜ் பவனில் இருந்து தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குத் தெளிவான மற்றும் முன் கூட்டிய வழிகாட்டுதல்களை வழங்க பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், பொருத்தமான ஒரு தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்திற்கோ அல்லது மனோன்மணீயம் சுந்தரனாரின் நினைவிற்கோ எந்தவித அவமரியாதையும் செய்யப்படவில்லை என்று தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உறுதிமொழியை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இச்செயல் மிகவும் சூடான வரவேற்பைப் பெறும் என்றும், இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட நல்லெண்ணத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரிதும் உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இதை ஒரு புகாராக வைக்கவில்லை; மாறாக தமிழ்நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதைக்குரிய கோரிக்கையாகவே சமர்ப்பிக்கிறோம். மாநிலத்தின் நிறுவனங்கள் கண்ணியத்துடனும், தவிர்க்கக்கூடிய சர்ச்சைகள் இன்றியும் செயல்பட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை ராஜ் பவனும் பகிர்ந்து கொள்ளும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது குறித்து மேலும் விவாதிக்கப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதினால், உங்களை நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/tn-mps-letter-to-governor-on-tamil-thai-vaazhthu




