சென்னை, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) வரலாற்றிலேயே அதிக ரன் டைம் கொண்ட படமாக உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்கள் இப்படத்தையும் இயக்கியுள்ளனர். ‘எண்ட்கேமை’ மிஞ்சுமா? இந்நிலையில், இப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் ரன் டைம் தோராயமாக 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அதிக ரன் டைம் கொண்ட படமாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ இருந்து வருகிறது. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடியது. தற்போது ‘டூம்ஸ்டே’ படத்தின் ரன் டைம் குறித்த தகவல் உண்மையானால், ‘எண்ட்கேம்’ படத்தின் சாதனையை இது முறியடிக்கும். டிசம்பர் 18-ல் ரிலீஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-longest-film-in-marvel-history-will-doomsday-surpass-endgame




