தாராபுரம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அத்தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், “இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்” எனப் பேசினார். மேலும், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!நிலை மாறினால்குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்தினம் ஜாதியும் பேதமும்கூறுவான்! பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டதிமுக தலைவரேமன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, அமைச்சர் அருண் ராஜ்ஜும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mocking-women-during-the-election-campaign-sengottaiyan-condemns-mk-stalin




