திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வி.ஐ.பி. தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. லட்டு வாங்க சணல் பைகள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரசாத லட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் பக்தர்கள் எடுத்துச் சென்று சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பைகளை மலையில் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சணல் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுடன் இணைந்து சணல் பைகளை விற்பனை செய்து வருகிறது. பக்தர்கள் வாங்கும் லட்டு அளவுக்கு ஏற்ப ரூ.10, 20, 50, 80, 100 ஆகிய விலைகளில் சணல் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோவிலுக்கு பின்புறம் உள்ள லட்டு விற்பனை மையத்தில் இயங்கும் இந்திய சணல் கழகத்தின் விற்பனை மையத்தில் இந்த சணல் பைகள் விற்கப்படுகின்றன. இவற்றுடன் மக்கும் தன்மை கொண்ட பைகளும் விற்பனை செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழா தொடக்கம் முதலே திருப்பதி மலையில் பக்தர்களின் கூட்டம் குறையாமல் உள்ளது. தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மீதமுள்ள பக்தர்கள் மறுநாள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சாதாரண பக்தர்களும் சிரமம் இன்றி விரைந்து தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் நாளை (1-ந்தேதி) மற்றும் 5-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் அந்த நாட்களுக்கு முந்தைய நாட்களான 30.9.2026 (இன்று) மற்றும் 4.10.2026 ஆகிய நாட்களில் 'பிரேக் தரிசன'த்திற்கான (Break Darshan) பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு தேவஸ்தான்ம எடுத்துள்ள முடிவைக் கவனத்தில் கொண்டு, பக்தர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டைம் ஸ்லாட் டோக்கன் பெறாமல் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/devotees-throng-tirupati-vip-break-darshan-cancelled-on-october-1-and-october-5




