கும்பகோணம், சீன நாட்காட்டி சிக்கலால் ஆபத்தை சந்தித்தோம் என டிராவல்ஸ் உரிமையாளர் சையத் சாதிக் கூறியுள்ளார். கும்பகோணம் சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சையத் சாதிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சீன நாள்காட்டிவின்படி, ஆகஸ்ட் 1 முதல் 20-ந்தேதி வரை குதிரை ஆண்டு என்பதால், ஜெயின் மத பக்தர்கள் மட்டுமே நேபாள கோவில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி ஆகஸ்டு 1-ந்தேதி புறப்படுவதற்கான எங்கள் விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினார்கள். இதனால்தான், ஆகஸ்ட் 1-ந்தேதி செல்லலிருந்த பயணம் ஆகஸ்ட் 23-ந்தே திக்கு மாற்றப்பட்டது. இந்த தேதி மாற்றத்தால், எங்களுடன் நேபாளம் வர வேண்டிய சில பக்தர்களுக்கு வர முடியாமல், அவர்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சில பயணிகளின் பாஸ்போர்ட்கூட என்னிடம்தான் உள்ளது. எங்கள் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 37 பேர் கடந்த 23-ந் தேதி இரவு நேபாளத்துக்கு கைலாய யாத்திரைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தோம். அதன்படி அனைவரும் முதலில் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் அனைவரும் காத்மாண்டு சென்றோம். அங்கு அவர்கள் அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தோம். பின்னர் அவர்களுடன் நான் பேசிவிட்டு மறுநாள் தான் எனது மகனை அங்கு அவர்களுடன் விட்டுவிட்டு நான் ஊர் திரும்பினேன். நான் 35-ந் தேதி இரவு வரை அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். பின்னர் நேற்று காலை 8 மணிக்கு அவர்கள் காலை உணவை முடித்து கொண்டு 3 பஸ்களில் யாத்திரையை தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களுடன் சென்ற ரகு என்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தாங்கள் காலை 9 மணிக்கு பஸ்சில் சென்றபோது நில அதிர்வு ஏற்பட்டது. எங்களுக்கு பின்னால் வந்த பஸ் திடீரென பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்தில் சிக்கியதை பார்த்தோம். ஆனால் அங்கிருந்தால் எங்கள் உயிருக்கும் ஆபத்து என டிரைவர் கூறியதால் எங்களால் இறங்கி பார்க்க முடியவில்லை. பின்னர் நாங்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற பிறகு ராணுவத்தினரிடம் தகவல் சொன்னோம். ராணுவத்தினர் அனைவரையும் தேடி வருகின்றனர் என கூறினார். நேபாளத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க வேண்டும். கடவுள் அருளால் அனைவரும் உயிர்ப்பிழைக்க வேண்டும் என வேண்டு கிறேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-faced-danger-due-to-chinese-calendar-problem-travels-owner-sensational-news




