மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் விழாக்களுக்கு வர மறுப்பது ஏன்? இரட்டை வேடம் போடுவது சரியா? என திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் விழாக்களில் பங்கேற்பதில்லை. நயன்தாராவின் இந்த முடிவு திரை உலகில் விவாதப் பொருளாகவே இருந்து வந்தது. சமீபத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘டாக்சிக்’ படத்தின் புரொமோஷன் விழாவில் பங்கேற்றார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா படத்தின் புரொமோஷன் விழாவுக்கு யாஷ் தனிப்பட்ட முறையில் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு வந்தேன் என விழாவில் பேசியிருந்தார். நயன்தாரா தயாரித்து நடித்துள்ள ‘ஹாய்’ படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் விழா நேற்று முன்தினம் திருச்சியில் நடந்தது. விழாவில் நயன்தாரா கவினுடன் பங்கேற்றார். மேலும் படத்தின் விளம்பரங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இரட்டை வேடம் போடுவது சரியா? இது குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அளித்த பேட்டியில், “நயன்தாரா தனது கணவர் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் விழாக்களுக்கு வர மறுப்பது ஏன்? இரட்டை வேடம் போடுவது சரியா? தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும், சூழ்நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். அஜித்தும், நயன்தாராவும் ஆரம்ப காலத்தில் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான். ஆனால் வளர்ந்த பிறகு வரமாட்டோம் என்று சொல்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/why-does-nayanthara-refuse-to-attend-other-producers-film-festivals-tirupur-subramaniam




