ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 9 மணிக்கு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு நித்தியல், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வாசல்முன் எழுந்தருளினார். வழுக்குமரம் ஏறிய சிறுவர்கள் கோவில் முன்பு வழுக்கு மரம் எண்ணெய் தடவப்பட்டு தயார் நிலையில் இருந்தது. வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசு பொருட்கள், பலகாரங்கள், பழங்கள், படம் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு ஒரு சிறுவன் உயரே சென்று அதிலிருந்த பலகாரம், பரிசு, படம் போன்றவற்றை எடுத்துக்கொண்டார். பின்னர் பெருமாள் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/srivaikuntam-boys-climbed-valukku-maram-at-kallapiran-swamy-temple




