சென்னை, சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர். சுவாசக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழ் வி.எஸ்.பாபு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டுள்ள எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை சுகாதரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நுரையீரல் தொற்று காரணமாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-condition-is-stable-minister-arunraj




