ஜார்கண்ட், இந்தியாவுக்காக சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் 4 தங்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் காய்கறி விற்றும், வாடகை கார் ஓட்டியும் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்தியாவுக்காக 4 தங்கம் வென்றவர் தற்போது காய்கறி விற்கிறார் சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கம் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்று தந்தவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான அமர்தீப் குமார். தற்போது இவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார். குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை போக்கவும், வாங்கிய கடனை அடைக்கவும் ராஞ்சியின் வீதிகளில் காய்கறி விற்றுக் கொண்டும், வாடகை கார் ஓட்டியும் அவர் பிழைப்பு நடத்தி வருகிறார். விளையாட்டு வீரருக்கு முறையான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை தான் வென்ற தங்கப் பதக்கங்களை தனது சிறிய தற்காலிக கடையின் சுவரில் அவர் மாட்டி வைத்திருக்கும் காட்சி இணையதளத்தில் வெளியாகி தீயாய் பரவியது. நாட்டின் கொடியை உயர்த்திப் பிடித்த இந்த விளைாயட்டு வீரருக்கு முறையான வேலைவாய்ப்போ அல்லது அரசு நிதியுதவியோ கிடைக்காததே இத்தகைய நிலைக்கு காரணம் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/the-man-who-won-4-gold-medals-for-india-the-plight-of-selling-vegetables




