சென்னை, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தவெக அரசு ஆட்சியில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. இந்த நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே மது பாட்டில்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமலில் இருந்த அனைத்து சப்ளையர்களின் பொருட்களையும் கடைகளுக்கு சமமாக பிரித்து வழங்கும் முறை நிறுத்தப்படுகிறது. மூத்த மண்டல மேலாளர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள், உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் புதிய முறையின் மூலம் கடைகளில் தேங்கும் விற்பனையாகாத மதுக்கள் குறையும் என்றும் விற்பனை அதிகம் உள்ள பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-the-procedure-for-supplying-liquor-to-retail-outlets




