காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தொட்ட உப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 68 வயதான பாக்கியம்மா, தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கருப்பு நிற காரில் வந்த நபர், தொட்ட உப்பனூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்க, வழி சொன்ன பாக்கியம்மாவை, 'காரில் ஏறுங்கள், ஊரில் இறக்கி விடுகிறேன்' என்று அந்த நபர் கூறவும், கணவரை இருசக்கர வாகனத்தில் வரச்சொல்லிவிட்டு பாக்கியம்மா காரில் ஏறிச் செல்ல, செல்லும் வழியில் அவரை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 38 கிராம் தங்கத் தாலி சங்கிலியை பறித்து இறக்கிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து உப்பாரபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் 65 வயதான விஜயம்மா என்பவரிடம் காரில் வந்த அதே நபர், தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துவிட்டு முகவரி கேட்பது போல் விஜயம்மாவின் கழுத்திலிருந்த 50 கிராம் எடையுள்ள தங்கத் தாலி சங்கிலியை பறித்து தப்பித்துள்ளார். ஜீவன்குமார் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே நபர் ஓசூர் பாகலூர் பேருந்து நிறுத்தத்தில் நல்லூர் செல்வதற்காக காத்திருந்த 65 வயதான சரோஜம்மாவிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்து அவரை நல்லூரில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று இறக்கிவிடும்போது அவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர், மத்திகிரி பகுதியிலும் ஒரு பெண்ணிடம் நகை பறித்துச் சென்றுள்ளார். வெவ்வேறு பகுதிகளில் 4 பெண்களிடம் ஒரே பாணியில் நகை பறித்துச் சென்ற நபர் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அருகேயுள்ள கெரட்டினஹள்ளியைச் சேர்ந்த ஜீவன்குமார் (26) என்பதை கண்டுபிடித்தனர். சி.டி.ஓசகோட்டா பகுதியில் தபால்காரராக பணிபுரியும் ஜீவன்குமார் அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜீவன்குமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/chain-snatching-person-arrested-at-krishnagiri




