ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. பல்வேறு சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. படகில் தீ விபத்து இந்நிலையில், அந்நாட்டின் பாலி மாகாணம் படங்பாய் துறைமுக நகரில் இருந்து மேற்கு நுசா டெங்கரா மாகாணம் லெம்பக் நகருக்கு இன்று அதிகாலை படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 173 பேர் பயணித்தனர். நடுக்கடலில் லெம்பக் ஜலசந்தி பகுதியில் சென்றபோது படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படகில் சிக்கிய 172 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/indonesia-boat-fire-accident-one-killed




