வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால்தான், இந்த இரு தொகுதிகளும் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த இரு தொகுதிகளுக்கும் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தவெக ராஜினாமா செய்தவர்களை அந்தந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகக் களமிறக்குகிறது. வீரபாண்டியன் "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை வீரபாண்டியன் அறிவிப்பு இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி, தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடப் போகின்றன. இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டமன்றத் தேர்தலைத் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து சந்தித்தன. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தக் கூட்டணி உடைந்தது. தனித்துப் போட்டி தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். ஆனால், அவர்கள் தவெகவின் கூட்டணியில் இணையவில்லை. இதையடுத்து, தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன இரு கட்சிகளும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/cpi-cpm-to-contest-tamil-nadu-bypolls-in-two-seats




