தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைய இருக்கிறது. தாராபுரம் தொகுதியைப் பொருத்தவரை சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் ஆர்வத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். இறுதி நாளான இன்று த.வெ.க வேட்பாளர் சத்யபாமா நிர்வாகிகளுடன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அடுத்தடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். சத்யபாமா வேட்புமனுத் தாக்கல் வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சத்யபாமா, "தி.மு.கவால் பல்வேறு பிரச்னைகளை அனுபவித்து வந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அந்தக் கட்சியில் இணைய வேண்டும் என நினைத்ததில்லை. எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த ஒரே காரணத்திற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தூய்மையான இந்தத் த.வெ.க- வில் இணைந்துள்ளேன். மீண்டும் மக்கள் சேவைக்காக வந்துள்ளேன். மக்கள் சேவை மூலம் என்னை நான் நிரூபிப்பேன்" என்றார். தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்." - செல்வப்பெருந்தகை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/election/tvk-candidate-sathyabama-nomination-at-madhurandhagam




