டெல்லி, டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டார். தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர் புவனி (வயது 30). இவரும் அவரது நண்பருமான ஆயிஷ் ராமும் இன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளனர். கொலை அப்போது, டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிகரெட் பற்ற வைக்க புவனியிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். ஆனால் தீப்பெட்டி தர புவனி மறுத்துள்ளார். இதனால் அந்த இளைஞர்களுக்கும் புவனிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்கள் புவனி, ஆயிஷ் ராம் இருவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நரேஷ், தருன் உள்பட 3 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/delhi-man-killed-after-refusing-to-lend-match-stick-to-light-cigarette




