நகோயா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தற்காப்பு கலைகள் போட்டியில் இந்தியாவின் சுச்சிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அரையிறுதியில் தோல்வி ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு தற்காப்பு கலைகள் (எம்எம்ஏ) போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சுச்சிகா தரியால், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுச்சிகா 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார். இருப்பினும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சுச்சிகா ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் எம்.எம்.ஏ. பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் சுச்சிகா தரியால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகள் பிரிவில் இந்தியாவுக்காக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-2026-suchika-tariyal-makes-history-with-bronze-in-womens-mma-competition




