பார்படோஸ், கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி கடந்த 40 நாட்களுக்குமே நடைபெற்றது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றன. அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் இத்தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. அந்த வகையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜமைக்கா 170 ரன்கள் குவிப்பு இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அதிகபட்சமாக 114 ரன்கள் குவித்தார். அன்டிகுவா தரப்பில் அந்த அணியின் சுப்யான் முகீம் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்டிகுவா சாம்பியன் இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி அன்டிகுவா களமிறங்கிய 16.4 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜன்கோ 34 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-antigua-win-championship




