சென்னை, உளுந்தூர்பேட்டை அருகே தமிழக மக்கள் கழகம் என்ற புதிய கட்சியைத் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தொடங்கி உள்ளனர். அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை நடிகரும் ரேஸருமான அஜித் குமார், திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் பல முறை பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான விவாதங்கள் தமிழ்நாட்டில் அவ்வபோது எதிரொலித்து வருகிறது. ஆனால் இதுவரை அஜித் எந்தவொரு அரசியல் சார்ந்த கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. அஜித் - விஜய் சந்திப்பு சினிமாவில், ஒரு கால கட்டத்தில் அஜித் குமாருக்கு பரம எதிரியாக இருந்த விஜய், கடந்த 2024ல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும், தங்கள் அபிமான நடிகரான அஜித்தும் அரசியலில் களமிறங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு மற்றும் அவர்களின் சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளானது. முன்னதாக, முதல்-அமைச்சர் விஜய், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு குறித்து பாராட்டி இருந்தார் அஜித். புதிய கட்சி உதயம் இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கி, கட்சிக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரங்கேறியுள்ளது. தமிழக மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவராக ஆபித், மாநில செயலாளராக ராம்குமார், மாநில பொருளாளராக முகம்மது ஷா மற்றும், மாநில அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அஜித்திற்காக பொதுச்செயலாளர் பதவி காலி அஜித் ரசிகர்கள் தொடங்கியுள்ள தமிழக மக்கள் கழகம் கட்சி கொடி மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கொடியில் இரண்டு புறமும் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. தவெக கொடியில் இரட்டை யானை இடம்பெற்றிருக்கும். கிட்டத்தட்ட தவெக கொடியைப் போலவே இந்தக் கட்சிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். கட்சி தொடங்கி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், "அஜித் சார் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தமிழக மக்கள் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளோம். அஜித் சார் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். மாநில பொது செயலாளர் என்ற பதவியை அவருக்காக நாங்கள் காலியாக வைத்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ajith-fans-have-started-a-new-political-party-called-tmk




