சென்னை, நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு நாகராஜன் அவர்களை, 'வி த லீடர்ஸ்' இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். 'வி த லீடர்ஸ்' பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி 'வி த லீடர்ஸ்' என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையில், 'வி த லீடர்ஸ்' இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, அன்புள்ள நமது 'வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் தலைவர்களுக்கு வணக்கம். நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு நாகராஜன் அவர்களை, 'வி த லீடர்ஸ்' இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நமது அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கரு. நாகராஜன் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார். அவரது அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், நமது 'வி த லீடர்ஸ்' அமைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நமது அமைப்பின் செயல்பாடுகளை விரிவாகக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது 'வி த லீடர்ஸ்' அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு பொதுச்செயலாளராக சேர்க்கவும், அமைப்புப் நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் முழுமையான மற்றும் களப்பணியாளர்களும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும்… — K. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/karu-nagarajan-appointed-as-general-secretary-of-the-we-the-leaders-movement-annamalai-announces




