திருவனந்தபுரம், கேரளத்தில் வாரத்தில் 7 நாட்களும் முதல் பரிசு ரூ. 1 கோடி மதிப்பிலான லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. ஓணம் பண்டிகை இவை தவிர பண்டிகையொட்டி பம்பர் லாட்டரி விற்பனையும் அங்கு பிரபலம். அந்த வகையில் ஓணத்தையொட்டி நடத்தப்படும் முதல் பரிசு ரூ.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு முதல் அந்த தொகை ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குலுக்கல் செப்டம்பர் 26-ந் தேதி இது தொடர்பாக கேரள லாட்டரி துறை இயக்குனர் அஞ்சு கூறுகையில், நடப்பு ஓணத்தையொட்டி முதல் பரிசு ரூ.30 கோடிக்கான பம்பர் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான விற்பனையை வருகிற 17-ந் தேதி முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார். குலுக்கல் செப்டம்பர் 26-ந் தேதி நடக்கிறது. டிக்கெட்டின் விலை ரூ.500 மொத்தம் 10 சீரியல்களில் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். மொத்தம் ரூ.125 கோடியே 54 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும். 2-ம் பரிசு 20 பேருக்கு ரூ.1 கோடி அந்த வகையில் முதல் பரிசு ரூ.30 கோடி, 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.25 லட்சம் வீதம் 20 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.5 லட்சம் வீதம் 10 பேருக்கும், 5-ம் பரிசு ரூ.2 லட்சம் வீதம் 10 பேருக்கும், 6-வது பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் 54 ஆயிரம் பேருக்கும், 7-வது பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 81 ஆயிரம் பேருக்கும், 8-வது பரிசு ரூ.1,000 வீதம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேருக்கும், 9-வது பரிசு ரூ.500 வீதம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 400 பேருக்கும் வழங்கப்படுகிறது என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/kerala-increases-thiruvonam-bumper-lottery-first-prize-to-30-crore




