மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இன்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இது பாரதிராஜா ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajmohan-announces-manimandapam-for-director-bharathiraja-in-theni



