வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் காதலிப்பவர்கள், காதல் கொண்டவர்கள் அனைவருக்கும் ஒரு படம் பிடிக்கும் ன்னா அது பாரதிராஜா ஹீரோவாக நடித்த 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படம்தான். இயற்கையின் எழில் கொஞ்சம் சூழலில் தூய அன்பையும், ஏக்கம் நிறைந்த கிராமத்துப் பின்னணியையும் மையமாகக் கொண்ட கிராமிய காதலை படம் முழுதும் அள்ளித் தெளித்து இருப்பார். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலென இருக்கும் அற்புத கிராமம், ஆங்காங்கே சில குடிசைகள் அடர்த்தியான காடுகள், ஆறு மலைமுகடுகள், பரிசல்,முனி அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகம் காணும் மனிதர்கள். இப்படி படம் முழுக்க எதார்த்தம் நிரம்பி வழியும். ஒரு கிராமத்துக்கு சினிமா சூட்டிங்காக படக் குழு வந்து இறங்கும்.படத்தோட ஹீரோ இந்தப் படத்தோட ஹீரோ கிடையாது.ஆனால் படத்தோட இயக்குனர் தான் இந்த பட ஹீரோ அவர்தான் இயக்குனர் இமயம். அந்த கிராமத்தில் வசிக்கும் இரு பெண்களின் ஒருவர் ஹீரோமேல ஆசைப்பட இன்னொருவர் டைரக்டர் மேல் ஆசைப்படுவார் இவங்க ரெண்டு பேருடைய காதல் நிறைவேறுச்சா?இல்லையா? என்பதை கிளைமாக்ஸில் கவிதையாய் சொல்லும் படம் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குனரை விரும்பும் அருணாவும் திரைப்படக் கதாநாயகனே கணவனாக அடைய விரும்பும் சினிமா மோகம் கொண்ட விஜயசாந்தியும் இரு கதாநாயகிகள். துணிகளை சலவை பண்ணும் கதாபாத்திரம் நாயகிக்கு சலவை செய்த இயக்குனரின் துணிகளை வைத்துவிட்டு செல்லும்போது அதன் மேலே ஒரு பூ வைத்து விட்டுப் போவார். அந்தப் பூவை எடுத்து முகர்ந்து பார்க்கும் பாரதிராஜா ஜன்னலை பார்த்து அருணாவிடம் உன் பேர் என்னமா? ன்னு கேட்க பதில் சொல்லாமல் சென்று விடுவார்அருணா இது படத்தின் தொடக்க காட்சிகளில் ஒன்று. கல்லுக்குள் ஈரம் கிளைமாக்ஸில் படம் முடியும் வேளையில் ஊரில் காற்று சூறாவளி கலந்து கட்டி அடிக்கும். இயக்குனர் வீடு வீடாகச் சென்று நன்றி சொல்லும் பொழுது கதாநாயகியும் மறைந்து மறைந்து வருவார். அப்பொழுது ஒரு வீட்டுக்கு சென்று விட்டு வரும்போது கதாநாயகியின் கை வளையல்கள் சத்தமிடும். திரும்பி பார்க்க' என் பேரு சோலை' என்று சொல்வார் கதாநாயகி. பாரதிராஜாவின் டிபிகல் டச் அந்த சீன் அருணா இந்தப் படத்தில் தன் இரு கண்களால் காதல் மொழி பேசி நம்மை கொல்லாமல் கொல்வார். 'என்ன கண்ணுடா" இதுன்னு சொல்ல வைக்கும். அந்தக் கண்களால் வெட்கம், ஆச்சரியம், கோபம், அழுகை இயலாமை என அனைத்தையும் கொட்டி பிரமிக்க வைப்பார். இல்லை இல்லை அப்படி நடிக்க வைத்திருப்பார் இமயம். 'எண்ணத்தில் ஏதோ சில்லென்றது. அருணாவும் பாரதிராஜாவும் பேசிக்கொண்டே நடப்பதாக கற்பனை செய்து பாடும் அந்தப் பாடலின் இடையில் ஒரு ஸ்கிரீன் முழுதும் ஆற்றின் நடுவே பரிசலில் அருணா. பார்க்க ரம்மியமாக இருக்கும். அதேபாடலில் ஒரு சீன்ல பாரதிராஜாவின் சிரிப்பு.வேறலெவல் பாரதிராஜா வுக்கு மிகவும் பிடித்த கேமரா ஆங்கிளான ஒரு கண்ணுக்கு டைட் க்ளோசப் வைக்கும் ஷாட்கள். படம் முழுதும். இனிப்பான பாயசத்தில் குங்குமப்பூ போல செமையா இருக்கும். சினிமா ஷூட்டிங் கை வேடிக்கை பார்க்கும் கிராம மக்கள் அதேபோல ஒரு டம்மி சூட்டிங் மாதிரி சிச்சுவேஷன் ரெடி பண்ணுவதும் அதை ஒட்டி வரும் பாட்டும் ரம்யமான ஒரு கிராமிய பாடலை கண் முன்னே அழகாக படம் பிடித்து காட்டும் "தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே. தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே ளியே. " 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண் மணி பொன் இமைகளில் தாளலயம் நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும் '. பாடலின் ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளவை இந்தப் பாடலில் பாரதிராஜா நடிகருக்கும் நடிகைக்கும் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். பைத்தியமாக எப்படி நடித்துக் காட்டு நடிக்க வேண்டும் என்று சொல்லித் தரும் காட்சி அழகு ன்னா.ஒரு பெண் எப்படி வெட்கப்படும் காட்சியில் நடிக்கணும்? ன்னு சொல்லித் தருவது பேரழகு. இந்தப் பட நாயகி அருணா கடைசி வரை வாய்விட்டு தன் காதலை வெளிப்படுத்தாமல் இருப்பார். (இதயம் முரளி படத்திற்கு முன்னோடி இந்த படம் என்றும் சொல்லலாம்) அதுவும் படத்திற்கு முத்தாய்ப்பாக இருக்கும். இரைச்சலானஇசை, புரிதலற்ற பாடல்கள் இரட்டை அர்த்த வசனங்கள் நம்ப முடியாத ஹீரோயிசம் செயற்கை தனமான காட்சிகள் இவை எதுவும் இல்லாத ஒரு திரைப்படம். சில திரைப்படங்களை பொழுது போக பார்ப்போம். இன்னும் சில திரைப்படங்களோ பிடித்த ஹீரோவுக்காக பார்ப்போம். ஆனால் இயக்குனர் இமயத்தின் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே அவரின் இயக்கத்திற்காகவே பார்க்கப்பட்டது. அவரின் ஒவ்வொரு படங்களும் அகராதி போல. எல்லாவற்றிற்கும்அதில் அர்த்தம் கிடைக்கும். தலைமுறைகள் கடந்தும் உங்கள் படைப்புகள் பேசும். சென்று வாருங்கள். இளைப்பாறுங்கள். என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம். நடந்துகொண்டிருக்கலாம். நடக்கலாம். அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/my-vikatan-article-about-kallukul-eeram-movie




