சென்னை, பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10-க்கு "பயணி” குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், அறிமுகம் செய்து வைத்தார். நீண்ட தூரப் பயணங்களின் போது, பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் எளிதில் கிடைக்க செய்யும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 'அம்மா' குடிநீர் பாட்டில் (ஒரு லிட்டர்) ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அம்மா குடிநீர் முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 2021 தி.மு.க. ஆட்சியின்போது இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரசு விரைவு பஸ்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பயணி' குடிநீர் பாட்டிலுக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முக்கிய பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-rs-10-drinking-water-bottles-resumes-on-government-express-buses




