சென்னை, 'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான ஆலைகளிடம் இருந்து மது வகைகள், ஏழு ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலை யிடம் இருந்து ஒயின் கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் தயாரிக்கப்படும், 174 மது வகைகள், 40 பீர் வகைகள், நான்கு ஒயின்கள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் ஆறு மது வகைகள், ஐந்து பீர், ஐந்து ஓயின்கள் விற்கப்படுகின்றன. மேலும், 538 மது வகைகளை டாஸ்மாக் இறக் குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மது கடைகளில் விற்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சி யில், அக்கட்சிக்கு வேண்டியவர்கள் நடத்தும் சில ஆலைகளில் இருந்து தான் அதிகளவில் மது வகைகள் வாங்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் விரும்பும் மது வகைகள் கிடைக்கவில்லை. தற்போது, ஆட்சி மாற் றம் ஏற்பட்டுள்ள நிலை யில், புதிய, 'பிராண்டு' மது வகைகளை அதிகளவில் விற்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதுபான தயாரிப்பு ஆலை களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில், 25 மது வகைகள் தேர்வாகியுள்ளன. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பிராண்டு மதுபானம், பீர் விற்பது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில், 25 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் 'செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் மது கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops




