சென்னை, முதல்-அமைச்சர் விஜய், அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், 7 நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து காரில் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-arrived-in-chennai-after-concluding-his-london-trip




