சென்னை, திருச்சிராப்பள்ளி ரெயில்வே கோட்டத்தில் உள்ள பொன்மலை யார்டில் புதிய 8-வது பாதையை (Road No. 8) இயக்கத்துக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெறுவதால், சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர் - மதுரை அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் 12635 வைகை சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 13, 2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயில் வழித்தடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். எழும்பூர்- திருச்சி அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் 22675 சோழன் சூப்பர்பாஸ்ட் விரைவு ரெயில், ஜூலை 15, 2026 (புதன்கிழமை) காலை 8.00 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரெயிலும் வழித்தடத்தில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-change-in-vaigai-and-cholan-express-train-services




