சிசினோவ், ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, பயணத்தின் முதல் கட்டமாக, இன்று(20-ந்தேதி) அவர் மால்டோவா நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் மால்டோவா நாட்டிற்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். விமானம் மூலம் மால்டோவா தலைநகர் கிசினோவ் சென்றடைந்த திரவுபதி முர்முவை, அந்நாட்டு துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான மைஹை பாப்சொய், மால்டோவா வெளியுறவுத்துறை மந்திரி மிஹய் போப்சோய் ஆகியோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து மால்டோவா அதிபர் மாளிகைக்கு சென்ற திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டு அரசு முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பின்னர் மால்டோவா அதிபர் மயா சந்துவை சந்தித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா-மால்டோவா உறவில் பொருளாதார ஒத்துழைப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், விநியோக சங்கிலிகளை வலுப்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும், நமது வணிக சமூகங்களுக்கு இடையே நெருங்கிய ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். வேளாண்மை, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மருந்துத் தொழில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். மால்டோவா பயணத்தை நிறைவு செய்த பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் வடக்கு மாசிடோனியாவிற்கு செல்கிறார். ஜூலை 23-ந்தேதி முதல் ஜூலை 25-ந்தேதி வரை ருமேனியாவிற்கு திரவுபதி முர்மு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/economic-cooperation-is-a-key-component-of-india-moldova-relations-president-droupadi-murmu




