அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. முதல்வர் விஜய் முதல்வர் வந்த பிறகு என்ன முதலீடு செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நன்றாக இருக்கும். ஏற்கெனவே தவெக-வினர் அனுபவம் இல்லாதவர்கள். முதல்வர் விஜய் முதல் அக்கட்சியில் இருக்கும் அனைவருக்குமே அனுபவம் கிடையாது. அவர்கள் எதிர்பாராத விதமாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்பாடு என்பது அவர்களுக்கு வாக்களித்தவர்கள்கூட ஏன் வாக்களித்தோம். தவறு செய்துவிட்டோம் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆட்சியாளர்கள் தலை, கால் புரியாமல் ஆடுவதை நிறுத்திவிட்டு இருக்கின்ற வரை சரியான முறையில் ஆட்சி செய்தால் அவர்களுக்கு அது நல்லது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முடிவுரை எழுதுவார்கள். சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/ttv-dinakran-about-vijays-tvk-government




