தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டது. திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடந்தது. திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை இந்நிலையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "எனது வீட்டில் அனைத்து அறைகளையும் சோதிக்க அனுமதித்தேன். 8 மணி நேரத்திற்கும் மேலாக என் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். `அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு.' - மு.க.ஸ்டாலின் கண்டனம்! ஆளுங்கட்சியை விமர்சித்ததால்தான் எனது வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கின்றனர். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, மடை மாற்றுவதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அன்பில் மகேஸ் ஹிட்லர் முதல்வர், கோயபல்ஸ் அமைச்சர்கள். காலம் வரும்போது பதில் சொல்லுவோம். வரும் 18 ஆம் தேதி என்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சோதனைகளைச் சட்டப்படி எதிர்கொள்வேன்" என்று பேசியிருக்கிறார். திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/dmk-anbil-mahesh-about-raid-in-his-house




