மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மதுராந்தகத்தில் 27 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது 5 மாத ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் எதையும் குறிப்பிடவில்லை. மாறாக, திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து உரையாற்றியுள்ளார். பழைய வசனங்களையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். முதல்வர் விஜய் பா.ஜ.க தலைவர்கள் அவரது குடும்பத்தையும் தாயாரையும் தவறாகப் பேசினார்கள். ஆனால், திமுக அவ்வாறு பேசியதாகக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் பேசியதைப் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டார். ஏனென்றால் பா.ஜ.க-வை எதிர்த்துப் பேச பயப்படுகிறார். டெல்லியிலும் தமிழகத்திலும் திமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதாகப் பொய்யான பரப்புரையைச் செய்து, உண்மையான பிரச்னைகளை மடைமாற்றம் செய்ய முயல்கிறார். மோடியையோ அல்லது பா.ஜ.க அரசின் சட்டங்களையோ எதிர்த்து அறிக்கைகூட வெளியிடத் தைரியமற்றவர். பாலியல் குற்றங்களைப் பற்றி முதலமைச்சர் பேசும் அதே நாளில், வண்டலூரில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது எனப் காவல்துறையைக் கொண்டு பெற்றோர்களை மிரட்டியும், பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூற வற்புறுத்தியும் மூடிமறைக்கப் பார்த்தனர். மேலும், அவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது, அவரின் மனைவியையே அவர் கட்சியினர் அவதூறாகப் பேசினர். சொந்தக் குடும்பத்துப் பெண்களையே கட்சியினரின் அவதூறுகளிலிருந்து பாதுகாக்க முடியாத முதலமைச்சரால், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. ஸ்டாலின் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அப்போதே திமுக எதிர்த்தது. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததும் அதற்கு அரசாணை வெளியிட்டதோடு, குடிநீர் மற்றும் வீட்டு வரி செலுத்தினால்தான் வேலை என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. இதுதவிர, அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையை நிரூபித்துள்ள விஜய் அரசு ஒரு தூய சக்தி அல்ல. திமுகவின் சாதனைகளை வைத்துக்கொண்டு, ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டி வண்டியோட்டி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி தோழர்களை மதிக்காமல், தனிப்பட்ட முறையில் சினிமா டயலாக் பேசிவரும் விஜய் ஒரு 'தோல்வியடைந்த முதலமைச்சர்'. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இந்த அரசுக்கு மக்கள் தரும் சரியான பதிலடியாக அமையும் " என்றார். முதல்வர் விஜய் விசிட்: பெயின்டிங் டு பராமரிப்பு. தயாராகும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/paranthaman-has-responded-to-cm-vijays-speech-in-maduranthakam




