உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். 'தி டார்க் நைட்', 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லார்', 'தி பிரெஸ்டீஜ்', 'ஓப்பன்ஹெய்மர்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சிக்கலான திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் புதுமையான திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நோலன் தனி முத்திரை பதித்துள்ளார். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் தனித்துவம் தனது திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகத் துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக கிறிஸ்டோபர் நோலன் பெரும்பாலும் ஐமேக்ஸ் (IMAX) கேமராக்களை பயன்படுத்தி படமாக்கி வருகிறார். மேலும், கணினி கிராபிக்ஸ் (CGI) பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து, இயற்கையான மற்றும் தத்ரூபமான காட்சிகளை நேரடியாக படமாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதல் முறையாக புராணக் கதையை இயக்கும் நோலன் தற்போது கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது திரைப்படமான 'தி ஒடிசி' (The Odyssey)-யை இயக்கியுள்ளார். கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற 'ஒடிசி' காவியத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதுவரை அறிவியல் புனைவு மற்றும் த்ரில்லர் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நோலன், முதல் முறையாக புராணக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை 17-ல் வெளியாகும் 'தி ஒடிசி' பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'தி ஒடிசி' திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில், 'தி ஒடிசி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் பிரம்மாண்டம், ஐமேக்ஸ் கேமரா பயன்பாடு, காட்சிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-making-of-video-of-the-movie-the-odyssey-has-been-released-on-ott




